625.368.560.350.160.300.053.800.560.160.90 (5)அண்மையில் சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவம் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அவ்வாறான ஒரு பாரிய வெடிப்பு சம்பவம் தலைநகர் கொழும்பில் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகருக்கு விநியோகிக்கப்படும் மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகளே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

களனிதிஸ்ஸ அனல் மின்நிலையத்திலிருந்து கொழும்புக்கு தேவையான மின்சார விநியோகம் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் புதிதாக இரட்டை சுழற்சி மின்சக்தி நிலையம் 150 மெகாவாட் திறன் கொண்ட மின் கொள்ளளவு ஒன்று தேசிய அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின்விநியோக மின்சார கட்டமைப்பு பலமிழக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலம் முழுவதும் ஒழுங்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட பழுது பார்க்கும் நடவடிக்கையின் காரணமாக மின் நிலையத்தினுள் Napthor என்ற அமைப்பு மற்றும் தொட்டி அமைப்பு மிகவும் பலவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் ஏதாவதொரு மின் விநியோக கட்டமைப்பில் வெடிப்பு ஏற்பட்டால் உயிர் இழப்புகள், சொத்துகளின் அழிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இது சாலாவ இராணுவ முகாம் வெடிப்பை விடவும் அதிகமாக காணப்படும் என்பது தெளிவாகியுள்ளது.

இவ்வாறான கவனமற்ற பராமரிப்பு காரணமாக பாரிய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள நிலையில், அதனை விரைவில் சீர்செய்ய வேண்டும் என துறைசார் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment