625.368.560.350.160.300.053.800.560.160.90பாடசாலைகளில் சிறிய தவறுகளை செய்யும் மாணவர்களுக்கு விநோத தண்டனை வழங்கும் பாடசாலை ஒன்று தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.

மாவனெல்ல பகுதியிலேயே இந்த விநோத தண்டனை வழங்கும் பாடசாலை காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய மாணவர்கள் கழுத்தில் காட்ர்போட் மட்டை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளதாகவும், குறித்த காட்ர்போட் மட்டைகளில் 100 கட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒவ்வொரு மாணவரின் கழுத்திலும்தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் செய்யும் தவறுகள் ஒவ்வொன்றின் போதும் குறித்த மட்டையில் உள்ள ஒவ்வொரு கட்டங்களும் புள்ளடியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தண்டனையால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலாம் தரம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கே இந்த தண்டனை வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மாணவர்களின் ஒழுக்கத்தை பேணும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொல்கொல்லயில் இடம்பெற்ற ஆசிரியர் பயிற்சியின் போது தமக்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பயற்சிகள் வழங்கப்பட்டதாக குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment