625.368.560.350.160.300.053.800.560.160.90யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை – நகுலேஸ்வரம் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் பாடசாலை மாணவியொருவரின் சடலத்தினை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் உள்ள பிரபல பாடசாலையில் கல்விகற்கும் மாணவி என பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்த மாணவி மன உளைச்சல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரது பெற்றோர் வீட்டில் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் சடலத்திற்கு அருகில் இருந்து மாணவியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

எனினும் குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment