625.368.560.350.160.300.053.800.560.160.90நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகள் முடிவடைந்தன. சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்கு இம்மாதம் 29 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.

நீர்வேலி இரட்டை கொலை வழக்கில் விசாரணைகள் முடிவு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து, அரச தரப்பு சட்டத்தரணி மற்றும் எதிர்த்தரப்பு சட்டத்தரணி ஆகியோரின் தொகுப்புரைகளுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் திகதி குறிப்பிட்டு வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

தொகுப்புரையையடுத்து, தீர்ப்புக்கான திகதி நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது வரையில் எதிரிகையத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சகோதரியையும் மைத்துனைனயும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சுமத்தி இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீர்வேலி மேற்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்க்கண்டு உதயகுமார் என்பவரையும், அவருடைய மனைவியாகிய உதயகுமார் வசந்திமாலா என்பவரையும் கொலை செய்தததுடன்,

அவர்களின் மகனான உதயகுமார் குகதீபனைக் காயப்படுத்தி, அவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, குணா என்றழைக்கப்படும் அருணாசலம் குகனேஸ்வரன் என்பவருக்கு எதிராக இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment