625.368.560.350.160.300.053.800.560.160.90இந்தியாவுக்கு அண்மையில் யாத்திரை மேற்கொண்டு நாடு திருபிய நிலையில் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர்.

இவர்களது உயிரிழப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அச்ச உணர்வுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3 N2 என்ற வைரஸ் தொற்றின் காரணமாகவே உயிரிழந்துள்ளமை ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் வைரஸ் நிபுணர் ஜூட் ஜயமஹா இந்த தகவலை உறுதிசெய்துள்ளார்.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தீவிரமானதல்ல. எனினும் நோய் தடுப்புகள் குறைவான சிறுவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வயோதிபர்களுக்கு தொற்றும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிக்கலுக்கு மத்தியில் கல்லீரல் மற்றும் நுரையீரல்களில் பல்வேறு தொற்று நிலைமைகள் ஏற்பட கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று இலங்கையில் தொடர்ந்து காணப்படுகின்றமையினால் இது குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment