625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)_1மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் 196ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரி தின ஆரம்ப நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

காலை 7 மணியளவில் பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான வாகனப் பேரணியினை பாடசாலை அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் ஆரம்பித்து வைத்தார்.

இந்த வாகனப் பேரணி பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி, வைத்திய சாலை வீதி, வாவிக்கரை வீதியூடாக மணிக்கூட்டு கோபுரத்தை வந்தடைந்து பாடசாலையை சென்றடைந்தது.

இதன் போது, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

197 துவிச்சக்கர வண்டிகளில் பாடசாலையின் மாணவிகள் முன்செல்ல ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றொர்கள் உட்பட பலர் இந்தப் பேரணியில் இணைந்து கொண்டனர்.

இதே நேரம், பிரதான நிகழ்வுகள் திங்கட்கிழமை ஆனைப்பந்தி ஆலயத்தின் பூஜை வழிபாடுகளும், புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்தில் ஆராதனையும் நடைபெற்று பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள், கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)_1

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90_1

Comments

comments, Login your facebook to comment