625.368.560.350.160.300.053.800.560.160.90யாழ். குடாநாட்டில் நாளை நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தென்மராட்சி மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசங்களிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சிப் பிரதேசத்தில் நாவற்குழி, கைதடி, நுணாவில், கனகம்புளியடி, சாவகச்சேரி, மீசாலை, கொடிகாமம், புத்தூர்ச் சந்தி ஆகிய இடங்களிலிருந்து பேரணி ஆரம்பமாகவிருக்கும் நல்லூர் ஆலயம் வரை பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் பளை, புலோப்பளை, அரசர் கேணி, கச்சார் வெளி, செல்வபுரம், கிளாலி, மாசார், சோரன்பற்று, இயக்கச்சி ஆகிய இடங்களிலிருந்து பேரணி ஆரம்பமாகவிருக்கும் நல்லூர் ஆலயம் வரை பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

தென்மராட்சி பேருந்து ஒழுங்குகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு 077714820, 07778733425 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும், பச்சிலைப்பள்ளிப் பேருந்து ஒழுங்குகள் குறித்து அறிந்து கொள்வதற்கு 0778721432 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளுமாறு பேரணி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment