625.0.560.320.160.600.053.800.668.160.90முல்லைத்தீவு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் அம்பலவன் பொக்கணைப்பகுதியில் 77.450 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

கடற்படையினர் வழங்கிய தகவலை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த கஞ்சா போதைப்பொருளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியை கைவிட்ட நிலையில் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment