1456289017-4361அம்பாலங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பின்னர், அவரது காதலன் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது.

எனினும் காதலன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சகோதரர் உட்பட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாலங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி பாடசாலை மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அந்த இடத்தில் இருந்து ஓடிச் சென்ற காதலன் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்து இறந்து போனதாக கூறப்பட்டதுடன் அவரது சடலமும் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த யுவதியின் சகோதரர், தனது தங்கையை காதலன் ரயில் முன் தள்ளி விட்டதாக முதலில் கூறியதுடன் பின்னர் தங்கை தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனைகளில் இளைஞன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரதிபலனாக தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சகோதரர், ரம்புக்கனை பிரதேசத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இளைஞனை கொன்ற விதம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தங்கை தற்கொலை செய்து கொண்ட பின்னர், தங்கையின் காதலன் ஓடிச் சென்று பட்டபொல என்ற பிரதேசத்திற்கு செல்லும் பஸ்ஸில் ஏறியதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர் தனது நண்பன் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து முச்சக்கர வண்டியில் ரயில் நிலையத்திற்கு அருகில் வருமாறு கூறியுள்ளார்.

தங்கையின் காதலன் பயணம் செய்த பஸ்சை பின் தொடர்ந்து சென்ற சந்தேக நபர்கள், அவரை பஸ்சில் இருந்து இறக்கி, தாக்குதல் நடத்தி, கிணற்றுக்கு கொண்டு சென்று உயிரிழக்கும் வரை தண்ணீரில் அமிழ்த்தி, கொலை செய்தாக சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment