625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)பச்சை குத்துவதினால் குருதி சார் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த நோய்கள் மூன்று விதமாக பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் இந்த தொற்று நோய்கள் பச்சைக்குத்துவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மூலமே பரவும் அபாயமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்துடன் ஒருவருக்கு பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் மற்றொருவருக்கும் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும் என இலங்கை பொதுச் சுகதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment