625.368.560.350.160.300.053.800.560.160.90நாட்டில் சிறுவர்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை செய்ய நீதிமன்ற கட்டமைப்புக்கு புறம்பாக நீதிபதிகள் குழுவினரை உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் சிறுவர் பாதுகாப்பு கொள்கையினூடாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

இவ்வாறு பொலிஸ் பிரிவிலும் சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பாக விசேட பிரிவினரை உருவாக்குவதற்காக யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும் பாதிக்கப்படும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment