625.500.560.350.160.300.053.800.900.160.90மின்னேரியா – ஹேன்யாய பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இன்று பகல் குறித்த சிறுமியின் தாய் கழிவறைக்கு சென்றிருந்த போது, வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குறித்த சிறுமி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சிறுமி மீட்ட தாய் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ள போதும் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மினனேரிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment