625.0.560.320.160.600.053.800.668.160.90திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபகரமாக முறையில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (25) பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்களும் உயிர் இழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் கூறியுள்ளார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,

ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று சிறுவர்கள் பயணித்ததில் இருவர் உயிர் இழந்துள்ளதுடன் ஒருவர் தப்பித்துள்ளதோடு தப்பித்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தின் போது உயிர் இழந்தவவர்கள் பீ.சியாம் (15) ,ஏ.நிப்றாஸ் (15) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிர் இழந்த இரு சிறுவர்களினதும் சடலம் மூதூர் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment