4-6வவுனியா வாரிக்குட்டியூரில் கடந்த புதன்கிழமை (21.09.2016) காலை மாணவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வாரிக்குட்டியூர் கனேஸ்வர மகா வித்தியாலயத்தில் இ.சஜீவன் ( மாணவத்தலைவன்) மீது கடந்த புதன்கிழமை (21.09.2016) காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் இனந்தேரியாத சிலர் இவரை சரமாறியாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த மாணவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தீடிர் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment