625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)_1வவுனியா, பேயாடி கூழாங்குளம் பகுதியில் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இன்றி தாம் மிகவும் அவலநிலையில் அன்றாடம் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யுத்த காலத்தில் வவுனியா, நொச்சிமோட்டை கிராம அலுவலர் பிரிவுகுட்பட்ட பேயாடி கூழாங்குளம் பகுதியில் உள்ள மக்களின் காணிகள் பல இராணுவ முகாமாக காணப்பட்டது.

எனினும் 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமது காணிகளின் ஒரு தொகுதி விடிவிக்கப்பட்டு, 39 இற்கும் அதிகமான குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்ற போதும் 25 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்கள் மற்றும் மலசலகூடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை.

இதேவேளை அருகில் புதிதாக உருவாக்கப்பட்ட கொக்கெலிய சிங்கள குடியேற்றம் சகல வசதிகளுடனும் எமது பகுதி நோக்கி அகலக்கால் வைத்து வருகிறது.

ஆனால் எமக்கு தான் அடிப்படை வசதிகள் கூட இல்லை. இதனால் நாம் காணிகள் இருந்தும் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அம் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமக்கான வீட்டுத்திட்டம் மற்றும் மலசல கூடம் போன்ற அடிப்படைவசதிகளையாவது நிறைவேற்றித்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90_1

 

Comments

comments, Login your facebook to comment