625.0.560.320.160.600.053.800.668.160.90உதயதேவி ரயில் மோதியதில் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முஹம்மது அலியார் செய்யது இப்ராஹிம் (வயது 45) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்த உதயதேவி ரயிலில் மோதுண்டே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஓட்டமாவடிப் பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மேற்படி நபர் நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த நபர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Comments

comments, Login your facebook to comment