625.368.560.350.160.300.053.800.560.160.90யாழ்.நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியில் கலந்துகொண்டதனால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரி.ஐ.டியினர் (பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்) என்று அடையாளப்படுத்திய நபர்கள் தம்மை அச்சுறுத்தியதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவரால் நேற்று முறையிடப்பட்டது.

முன்னரும் தாம் போராட்டங்களில் கலந்துகொண்டதாகவும், தமது ஆண் பிள்ளை வெளிநாட்டில் உள்ளதாகவும், இந்நிலையிலேயே அவ்வாறு அச்சுறுத்தப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளரான தாயையும் அவரது மகளையும் ரி.ஐ.டிஎன்று கூறியவர்கள் அச்சுறுத்தியதோடு அலைபேசியையும் சோதனையிட்டனர் என்றும் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment