20160930_101055

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் பேரவையினரை தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தியுள்ள சிங்கள பேரினவாத அமைப்பான    பொதுபல சேனா, அவர்களை முற்றாக ஓரம்கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி பேரெழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும், வட மாகாண முதலமைச்சருக்கும்  எதிர்ப்பு  தெரிவித்து  இன்று வவுனியாவில் நடத்திய கண்டனப் பேரணியின் போதே பொது பல சேனா இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றது.

வவுனியா – இறம்பைக்குளம் பகுதியில் இன்று காலை 9.30 அளவில் ஒன்று திரண்ட சுமார் 150 பேர் அடங்கிய பொது பல சேனா அமைப்பினர் அங்கிருந்து வவுனியா நகரை நோக்கி கண்டனப் பேரணியை ஆரம்பித்தனர்.

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியின் ஆரம்பத்தில் வெளி இடங்களிலிருந்து பேரூந்துகளில் அழைத்துவரப்பட்ட சுமார் 150 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

எனினும் பேரணி வவுனியா நகரை அண்மித்த போது மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் இணைந்துகொண்டு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட தமிழ் அரசியல் தலைவர்களை இனவாதிகளாக அடையாளப்படுத்தி கோசங்களை எழுப்பினர்.

அது மாத்திரமன்றி வட மாகாண முதலமைச்சர் உட்பட எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டோர் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் அவர்களை முற்றாக ஓரம்கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி  பதாதைகளையும் தாங்கிய வண்ணம் கோசம் எழுப்பினர்.

அதேவேளை சிங்கள பௌத்த கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கண்டிய நடனக் கலைஞர்களையும் இந்த பேரணியில் இணைத்துக்கொண்டிருந்த பொதுபல சேனா அமைப்பு,ஸ்ரீலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும், அதனால் தமக்கு எந்தவொரு இடத்திலும் சிங்கள,பௌத்த மதத்தை பரப்பவும், புத்தர் சிலைகளையும், விகாரைகளையும் அமைப்பதற்கும் அதிகாரமும், உரிமையும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்த நிலையில், கண்டனப் பேரணியின் இறுதியில்  மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண ஆளுநரின் செயலளார் ஆகியோரிடம் கலபொட அத்தே ஞானசாரதேரர்  மகஜர் ஒன்றையும்கையளித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்த பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தலைமையிலான பேரணியில் கலந்துகொண்டவர்கள் அங்கு சுமார் 40நிமிடங்கள் வீதியை வழிமறித்து ஆர்ப்பட்டத்திலும் ஈடுபட்டனர்.

வடக்கில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தை குறைக்குமாறும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி பேரெழுச்சியுடன் எழுக தமிழ் பேரணி இடம்பெற்றிருந்தது.

இதற்குத் தலைமை தாங்கியிருந்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டுவரும் சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ பிரசன்னம் காரணமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை பட்டியலிட்டிருந்தார்.

20160930_101055 20160930_101109 20160930_101120 20160930_101126 20160930_101532 20160930_101548DSC_0001 DSC_0004 DSC_0009 DSC_0017 DSC_0018 DSC_0019 DSC_0022 DSC_0023 DSC_0025 DSC_0027 DSC_0034 DSC_0037 DSC_0041 DSC_0043 DSC_0045DSC_0012

 

Comments

comments, Login your facebook to comment