4குளியாப்பிட்டிய – சென் ஜோசப்கல்லூரியில் 4ஆம் தரத்தில் பயிலும் 9 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கிய மற்றுமொருமாணவர் ஒருவரின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் பிள்ளையை நேற்று முன்தினம் இரண்டு மாணவர்கள் தாக்கியுள்ளமையினால் குறித்த நபர் பாடசாலைக்கு வந்து 4ஆம் தரத்தில் பயிலும் குறித்த மாணவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தாக்குதலில் காயமடைந்த மாணவன் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment