DSC_0119வவுனியா கூமாங்குளத்தில் இன்று(01.10.2016) பிற்பகல் 2.30மணியளவில் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் கிராம அபிவிருத்திச் சங்கம், முதியோர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் கூமாங்குளம் கிராம அலுவலகர் சா. கம்ஜகன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக ;வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே. கே. மஸ்தான், சிறப்பு விருந்தினராக  சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் திரு. பாலச்சந்திரன், திரு. எஸ். கபிலன் வாழ்வின் எழுச்சித்திட்டம் கூமாங்குளம், திரு.இ. இராமச்சந்திரன் மாவட்ட முதியோர் சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வில் 70வயதிற்கு மேற்பட்ட 5முதியவர்கள் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் முதியோர் சங்கத்திலுள்ள 175 உறுப்பினர்களுக்கு நினைவு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டனர்.
அப்பகுதி பொதுமக்கள் அரச. அரச சார்பற்ற நிறுவனங்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
DSC_0117DSC_0119 DSC_0120 DSC_0121 DSC_0122 DSC_0123 DSC_0124 DSC_0125 DSC_0126 DSC_0127 DSC_0128 DSC_0129 DSC_0130 DSC_0131 DSC_0132 DSC_0133 DSC_0134 DSC_0135 DSC_0136 DSC_0137 DSC_0138 DSC_0139 DSC_0140 DSC_0141 DSC_0143 DSC_0144 DSC_0145 DSC_0146 DSC_0147 DSC_0153 DSC_0158 DSC_0159 DSC_0161 DSC_0164 DSC_0166 DSC_0167 DSC_0168 DSC_0169 DSC_0170 DSC_0171 DSC_0173 DSC_0174 DSC_0175 DSC_0177 DSC_0178 DSC_0181 DSC_0186

Comments

comments, Login your facebook to comment