8d5d92268957d54463f5c93c0ce4c544_XLசெவனகலவிலுள்ள வாழ்வின் எழுச்சி சமுர்த்தி வங்கியில், நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏழு உத்தியோகஸ்தர்கள் இன்று(01) அமுலுக்கு வரும் வகையில் பணிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

வாழ்வின் எழுச்சி திணைக்கள பணிப்பாளரின் உத்தரவுக்கமைய குறித்த பிரதேச செயலாளர் சந்தன லொக்குஹேவகே மேற்படி ஏழு பேருக்கும் இடைநிறுத்த கடிதங்களை வழங்கியுள்ளார்.

இந்த வங்கியில் இலட்சக்கணக்கான பண மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டைகள் பாவிக்கப்பட்டு பண மோசடி முன்னெடுக்க பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுனியா வடக்கிலிலும் ஊழல் இடம்பெற்று சமூர்த்தி உத்தியோகத்தர் இடமாற்றம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment