625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பொதுபலசேனாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் பேரணி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போராட்டத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கலாபோபஸ்வேவ பகுதியில் குடியிருக்கும் சிங்கள மக்களே கலந்து கொண்டனர்.

வவுனியாவின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் சிங்கள மக்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இவ் ஆர்ப்பாட்ட பேரணிக்கு மக்களை ஏற்றி இறக்குவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வீதியோரத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து மதுபான போத்தல்களும், பணமும் வழங்கப்பட்டதாகவும் அவற்றை கொடுத்தே குறித்த மக்களை வரவழைத்துள்ளதாகவும் நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment