625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)எழுக தமிழை முற்றிலுமாக திசை திருப்பி தற்போது முழு இலங்கையையும் பரபரப்பாக்கி விட்டுள்ளார்கள் தென்னிலங்கை பிக்குமார்கள்.

ஏற்கனவே அவர்களுடைய வாதங்கள் வடக்கு மக்களை விடுதலை புலிகளாக சித்தரித்து வந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது வடக்கு முதல்வருக்கு எதிராக பாரிய அளவு போராட்டத்தினை நாடு முழுவதும் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இது ஸ்ரீலங்கா தமிழ்நாடு அல்ல எனவும் பின்லேடன் பின்னர் பிரபாகரன் தற்போது விக்னேஸ்வரன் என்ற பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

குறிப்பாக அதில் கடைசி அத்தியாயம் விரைவில் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிக்குகளின் கோஷமும் அதனையே வலியுறுத்தியது. அதன் நோக்கம் வடக்கு முதல்வருக்கு பிக்குகள் விடுக்கும் அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகின்றது.

என்னைக் கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினையும் பழியையும் விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இதேவேளை நேற்று கொழும்பில் சிங்க லே அமைப்பினர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது புலி விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும், வடக்கு சிங்களவர்களின் சொத்து, போன்ற பலவிதமாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் வடக்கு தமிழர்களுக்கு சொந்தமில்லை எனவும் பிக்குமார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment