625.500.560.350.160.300.053.800.900.160.90மிஹிந்தலை பகுதியிலுள்ள கடையொன்றின் காசாளர் மீது அரசியல்வாதியின் மகன் ஒருவர் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சிகரட் இல்லை என கூறியமையாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 8.10 மணியவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

அரசியல்வாதியின் மகன் மற்றும் மேலுமொரு இளைஞர் கடையினுள் நுழைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த மோதலில் தலையிட்ட பெண் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரின் மகன் மற்றுமொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளிலியே கடையினுள் நுழைந்து சிகரட் கேட்டார்.

காசாளர் சிகரட் இல்லை என கூறியதும் மோட்டார் சைக்கிளை கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு வந்த அரசியல்வாதியின் மகன், கடையின் காசாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரை காப்பாற்றுவதற்கு கடையின் உரிமையாளரின் தங்கை தடுக்க முயற்சித்த போது மற்றைய இளைஞர் கடையில் இருந்த நாட்காளியை தூக்கி உரிமையாளரின் தங்கையை தாக்கியுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மிஹிந்தலை பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

அங்கு பொலிஸார் உதவியுடன் தாக்குதலுக்குள்ளான உரிமையாளரின் தங்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment