625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் ஆசிரியரின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இலக்கான மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல்யமான ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியர் வகுப்பில் பாடம் கற்பித்துக் கொண்டிருந்த வேளை ஏனைய மாணவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் ஆசிரியரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

முகத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட குறித்த மாணவருக்கு காது பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வலி தாங்கிக் கொள்ள முடியாத மாணவர் பாடசாலையில் அழுதவாறே இருந்துள்ளார்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக குறித்த மாணவரின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

பாடசாலைக்கு வந்த பெற்றோர் மாணவரை அழைத்துச் சென்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வைத்திய சாலை விடுதியில் தங்க வைக்கப்பட்டு அம்மாணவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு வந்த வைத்தியசாலைப் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான தகவல்கள் பெற்றுக் கொண்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment