625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)தனியார் கப்பல் நிறுவனமொன்றில் பணியாற்றுவதற்காக மலேசியா சென்ற நிலையில், உயிரிழந்த இளைஞரின் இறுதிக்கரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளது.

காலி – அக்மீமன, பனாகமுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான சுபுன் மல்ஷார எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தனியார் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியாவிற்குச் சென்றுள்ளார்.

ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சென்ற அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகத் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளைஞரின் சடலம் கடந்த முதலாம் திகதி நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதுடன், நேற்றைய தினம் இறுதிக்கிரியைகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)

Comments

comments, Login your facebook to comment