625.0.560.320.160.600.053.800.668.160.90தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய் மொழியாகும். தமிழும், தமிழன் என்ற அடையாளமுமே இலங்கையில் 30 ஆண்டுகள் யுத்தம் இடம்பெற காரணமாக இருந்தது.

இந்த கொடிய யுத்தத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இன்று யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தமிழர்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், தமிழ் மொழி மீதான படுகொலை தொடர்ந்த வண்ணமே உள்ளது. பொது இடங்கள், அரச காரியாலயங்கள், பேருந்துகள் என எங்கு பார்த்தாலும் தமிழ் மொழி படுகொலை செய்யப்பட்டுள்ளதனை காணமுடிகின்றது.

அந்த வகையில், தற்போது வட மத்திய மாகாண சபைக்குரிய பெயர்ப் பலகையில் தமிழ் மொழி கொலை செய்யப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

மாகாண சபையின் அடையாளமாகக் காணப்படும் குறித்த பெயர்ப் பலகையில் தமிழ் மொழியில் எழுத்து பிழையாக எழுதப்பட்டிருப்பதானது சமூக ஆர்வல்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் இன்று தொடர்ச்சியாக தமிழ் மொழி கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் தேசிய கரும மொழிகள் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment