625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)கடந்த அரசாங்கத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போயிருந்த 587 ஆவணங்களில் 55 ஆவணங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடி மற்றும் முறைக்கேடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும் நாடாளுமன்ற குழு, அதற்கான 587 ஆணவங்களை சமர்ப்பிக்குமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் நாரஹேன்பிட்டி ஆவண காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த ஆவணங்கள், ஆவண காப்பகம் பாழடைந்திருந்தமையினால் கண்டுபிடிக்க முடியவில்லை என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே.ஜகத் சந்திரசிறி அறிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த ஆவணங்கள் பல்வேறு முறையில் வைக்கப்பட்டுள்ளமையினால் எதிர்வரும் வாரங்களுக்கு புதிய ஆவண காப்பகம் ஒன்றை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment