152020ம் ஆண்டில் இலங்கை நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக மாற்றமடையும் என டேஷ் என்ற நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஆனந்த சந்திரசிறி கொழும்பு வார இறுதி ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டில் இலங்கையை நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜப்பான் அரசாங்கம் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 11.5 கோடி ரூபா வழங்கியுள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தின் அடிப்படை மானுட பாதுகாப்பு திட்டத்திற்கு அமைய இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உதவியைப் பயன்படுத்தி இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் அற்ற நாடாக உருவாக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment