625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் கூட செய்யாதவற்றையே தற்போதைய ஆட்சி செய்து வருகின்றது. நாளடைவில் நாய்கள் வைத்திருந்தாலும் பணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இரத்தினபுரியில் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி மாபெரும் மக்கள் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.குறித்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவத்தார்.

மேலும் ரணில் தற்போது துரோகத்தனமான ஆட்சியைச் செய்து வருகின்றார். ஒருபக்கம் இராணுவம் பலிகொடுக்கப்படுகின்றனர் மறுபக்கம் அமைச்சர்கள் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர்.

இவ்வாறான நம்பிக்கை அற்ற ஒரு ஆட்சினையே தற்போது நடைபெற்று வருகின்றது. எவ்வாறாயினும் தற்போது தேர்தல் ஒன்றினை நடத்துவது என்பது நடக்காத காரியம் அதனை ரணில் தலைமை செய்யாது.

அதன் காரணமாக மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை பெற்று கொள்ள வேண்டி போராடுவோம். கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்வோம் அதற்கான ஆயத்தங்களை நாம் செய்வோம் எனவும் அவர் பகிரங்க அறைகூவலினை விடுத்தது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இதேவேளை மீண்டும் வடக்கில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்க தற்போதைய ஆட்சி திட்டமிட்டு செயற்படுகின்றது. நாட்டில் இனவாதமானது தூண்டப்பட்டு வருகின்றது.

அப்பாவி மக்களை பலி கொடுக்க வேண்டுமா? மீண்டும் தீவிர வாதத்திற்கு இடம் கொடுக்க வேண்டுமா? இவை எல்லாம் தடுக்கப்பட வேண்டுமானால் ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும் அதற்கான அனைவரும் மஹிந்த தலைமையில் முன்னேற வேண்டும் எனவும் விமல் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

comments, Login your facebook to comment