625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)வடக்கு , கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளின் உண்மையான, நியாயபூர்வமாண உரிமை இராணுவத்தினருக்கே உள்ளது.

இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கில் காணிச் சட்டம் என்ற ஒன்று இருக்கவில்லை. உரிமையாளர்களும் இருக்கவில்லை.

அங்கு பிரபாகரனின் சட்டம் மட்டுமே இருந்தது. பிரபாகரன் கையகப்படுத்தியிருந்த அந்த மக்களின் காணிகளை இராணுவத்தினர்தான் அவர்களிடம் மீளக் கையளித்தனர்.

பிரபாகரனை விரட்டி அவரிடமிருந்து காணிகளைப் பெற்று அந்த மக்களிடம் மீளக் கையளிக்க இராணுவத்தினர் முன்னோக்கி சென்ற சந்தர்ப்பத்தில்தான் இடத்தக்கு இடம் முகாம்கள் அமைக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், வடக்கு , கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளின் உண்மையான நியாயபூர்வமாண உரிமை இராணுவத்தினருக்கே உள்ளது.

இராணுவ முகாம்கள் வடக்கு, கிழக்கில் மட்டும் இல்லை. இங்கும் (தெற்கிலும்) இருக்கின்றன.

அநுராதபுரத்திலும் இருக்கின்றது. ஆனால், வடக்கு, கிழக்கில் மட்டுமே இராணுவ முகாம்கள் இருப்பதைப்போல கூறுகின்றனர்.

இராணுவம் பற்றிய பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இராணுவ முகாம்கள் இருப்பு பிரச்சினையாக உள்ளது என்றார்.

Comments

comments, Login your facebook to comment