வவுனியா பண்டாரிக்குளம் கிராம சேவையாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் இன்று ( 10.10.2016) காலை மேற்கொள்ளப்படவிருந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரின் தலையிடு காரணமாகவும் பிரதேச செயலாளரின் குறித்த கிராம செயலாளரை இடமாற்றம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்ச்சியினையடுத்து இன்று இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்;டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கிராம சேவையாளர் தமது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியதுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்துவதாகவும் தெரிவித்து அப்பகுதி மக்களால் பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்குடன் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்
14494659_1310515535635099_1909801666996373210_n

Comments

comments, Login your facebook to comment