625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)ஹம்பாந்தோட்டை மாவட்டம் அங்குனுகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், இதில் தந்தையும் மகனுமே உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்கள் தனியாக வீட்டில் இருந்த போது இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு தனிப்பட்ட தகராறே காரணம் எனவும் அறியமுடிகின்றது.

மேலும் குறித்த சம்பவத்தின் போது தாயும் மற்றுமொரு மகனும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இனங்கண்டு கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment