625.0.560.320.160.600.053.800.668.160.90_1யாழ். மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பஸ் நிலையத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தேசிய அடையாளம் என்பன பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை காலை குறித்த பஸ் நிலையத்தின் உள்ளே “தேசிய தலைவர்” என்று பிரபாகரனின் உருவப்படமும் “தேசிய அடையாளங்கள்” என புலி மற்றும் செம்பகம் வாகை மரத்தின் படங்கள் அடங்கியதுடன், விடுதலைப்புலிகளின் எழுச்சி நாட்கள் குறித்த துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன.

பஸ் தரிப்பிடத்திற்கு வந்த பொது மக்கள் குறித்த துண்டுப்பிரசுரத்தினை பார்த்துவிட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலின் பிரகாரம் பஸ் தரிப்பிடத்திற்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் வருகை தந்து துண்டுப்பிரசுரங்களை கிழித்துவிட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த சம்பவத்தினால் வடக்கின் அமைதியை குழப்பும் நோக்கத்தில் யாரேனும் இந்த சதி வேலையை செய்துள்ளனரா? அல்லது மீண்டும் விடுதலைப்புலிகள் தோன்றுகின்றனரா? என்ற பீதியில் மக்கள் இருப்பதை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கத625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90_1

Comments

comments, Login your facebook to comment