குருநாகல் – இப்பகமுவ பகுதியில் திருமணமாகிய அடுத்த நாளே மணமகள் தோளில் விழுந்து மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வருடமாக காதலித்த தன் மனைவியை கரம் பிடித்த அந்த மணமகன் இசுறு சம்பத்(25) தான் சோர்வாக இருப்பதாக உணர்ந்துள்ளார்.

பின்னர் குறித்த மணமகன் இறுதியாக தனது மனையிவியின் தோள் மீது சாய்ந்து மயக்கமுற்றவர் போல் இருந்துள்ளார்.

ஏதோ நடக்கின்றது என உணர்ந்து கொண்ட மனைவி, திடீரென கூச்சலிட்டு அனைவரையும் அழைத்து மணமகனை அவிசாவளை மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.625.0.560.320.160.600.053.800.668.160.90

சோர்வு, தூக்கமின்மை, பசி காரணமாக மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனின் இந்த மரணம் மணமகள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Comments

comments, Login your facebook to comment