625.500.560.350.160.300.053.800.900.160.90யுத்த காலத்திலும் காணப்படாத அளவு பொது மக்கள் தற்போது பொலிஸாரினால் தாக்கப்பட்டு வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதுறுகிரிய பொலிஸினால் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட இளைஞர் சட்ட விரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்

குறித்த இளைஞரை வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய முற்பட்ட போது பொலிஸாரை தாக்க முற்பட்டார் எனவும் இதனால் பொலிஸார் தூப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என்றும் இவர் கூறினார்.

இதேவேளை, குறித்த நபரை கைது செய்ய எந்த விதமான குற்றப்பத்திரிகையும் வைத்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தில் கடமையில் இருந்ததாக சொல்லப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர் தனிப்பட்ட பிரச்சினைக்காக தாக்குதல் நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பல குற்றங்களுடன் தொடர்புடையவர் எனவும் முன்னும் பொது மக்கள் மீதும் இவ்வாறு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை , பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அண்மையில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் பொலிஸார் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment