625.500.560.350.160.300.053.800.900.160.90தாயின் கவனயீனத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.நவாலி தெற்கு பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சிவசெல்வன் கேசவி எனும் பிறந்து 45 நாட்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தாய் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு ஏணையில் குழந்தையை படுத்தி விட்டு சமையல் வேலைகளை செய்ய சென்றுள்ளார்.

இதன் போது ஏணைமீதிருந்த தூணி ஒன்று ஏணையில் படுத்துறங்கிய குழந்தை மீது வீழ்ந்ததில், குழந்தை மூச்சு திணறலுக்கு உள்ளாகியுள்ளது.

தாயார் சமையல் வேலைகளை முடித்து விட்டு குழந்தையை தூக்க சென்ற வேளை குழந்தை அசைவற்று இருந்ததை அவதானித்து உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், உயிரிழப்புக்கு மூச்சு திணறலே காரணம் என தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment