625.500.560.350.160.300.053.800.900.160.90மத்திய மாகாணத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் 216 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள பிரபல பாடசாலையில்  இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறுவர் இல்லங்களில் இடம்பெறுகின்ற சில விடயங்கள் தனக்கு இரகசியமான முறையில் அறிந்துக் கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மத்திய மாகாணத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் இனிவரும் காலங்களில் சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment