625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)இலங்கையின் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையற்றவர்களாக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச பார்வை தினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வின் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

15 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு ஏதாவதொரு பார்வை குறைப்பாடு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் 285 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதிலும் 39 மில்லியன் பேர் பார்வையற்றவர்களாக உள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாலித மஹிபால கூறியுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment