images9-415x260முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்ய்பட்ட 175 குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினூடாக தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்;பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரவின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட 175 குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மேற்படி வாழ்வாதார உதவிகளுக்கு 175 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 87 பயனாளிகளுக்கு தோட்டச்செய்கைகளுக்;கான கிணறுகளை அமைப்பதற்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் எண்பத்தி ஏழு இலட்சம் ரூபாவும் 88 பயனாளிகளுக்கு விவசாயச் செய்கைகளுக்கான நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெளிகருவிகள் நீர் விநியோக குழாய்கள் என்பன தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் எண்பத்தி எட்டு இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.

Comments

comments, Login your facebook to comment