625.117.560.350.160.300.053.800.210.160.90-38மட்டக்களப்பு – களுதாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுதாவளை பொது நூலகத்திற்கு முன்பான பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர் களுதாவளையைச் சேர்ந்த 50வயதுடைய ஞா.செல்வநாதன் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment