625.0.560.320.160.600.053.800.668.160.90 (8)மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகை கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்துள்ள பொலிஸார் சந்தேகநபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மண்டபம் அருகே தெற்கு கரை கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்த இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கடத்தல் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பகல் வேதளைக்கும் மண்டபத்திற்ககும் இடையே அதி வேகமாக வந்த வாகனத்தை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர். எனினும், வாகனத்திலிருந்த ஓட்டுநர் தப்பிசென்றுள்ளார்.

இதனையடுத்து வாகனத்தையும் அதிலிருந்த கடத்தல் பொருட்களையும் பறிமுதல் செய்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் வாகனத்தின் உரிமையாளர் மற்றும் வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் இலங்கை நாட்டின் மதிப்பு ரூபாய் பத்துலட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்

இதேவேளை, சமீப காலமாக ராமநாதபுரம் கடலோர பகுதிகளிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடல் அட்டை கடல்குதிரை மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுவருவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)625.0.560.320.160.600.053.800.668.160.90 (9) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (8) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (7)

Comments

comments, Login your facebook to comment