யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

12.10.2016  ர.டிலாஜினி என்ற 18 வயது மாணவி திடீர் சுகயீனமுற்ற நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த சமயம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை. மேலும் உடனடி வைத்திய உபகரணங்களும் இல்லாத நிலையில், குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

Comments

comments, Login your facebook to comment