1425026120-4248தேநீர் பாத்திரத்தினுள் தவறி விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று 9 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.

குருநகர் தண்ணீர் தாங்கி வீதியைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய சுரேந்திரன் அஸ்வினி என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 5ம் திகதி கடற்றொழிலை மேற்கொள்பவர்களுக்கு தேநீர் ஊற்றிய குழந்தையின் தாயார் தேநீருடன் பாத்திரத்தை நிலத்தில் வைத்து விட்டு வேறொரு பாத்திரத்தை கழுவுவதற்கு சென்றுள்ளார்.

இதன்போது அப்பகுதிக்கு வந்த குழந்தை தேநீர் பாத்திரத்தினுள் தவறுதலாக விழுந்து படுகாய மடைந்துள்ளது.

குழந்தையை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 8 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்றைய தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணையை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment