625.472.560.320.505.600.053.800.900.160.100மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததுடன் பெண்னை கூட்டி வந்த நபர் தலைமறைவாகியுள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலிருந்து நேற்று(13) இரவு குறித்த பெண் மட்டு. போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மிகவும் ஆபத்தான நிலையில் கல்லாறு பகுதியிலிருந்து பெண் ஒருவரை மயக்க நிலையில் ஆண் ஒருவர் காரில் கூட்டி வந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில் செயற்கைச் சுவாசம் அளித்து அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக வைத்தியர்கள் தாதியர்களின் கண்காணிப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மருதமுனையினைச் சேர்ந்த 27 வயதானவர் என தெரியவருகின்றது.

அந்த பெண்ணை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வரை இருந்த அந்த நபர், குறித்த பெண் உயிரிழந்த செய்தி அறிந்ததும் மாயமாகியுள்ளார்.

பெண்ணினை ஏற்றி வந்த சிவப்பு நிறத்திலான காரினை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கைவிட்டுச் சென்றுள்ளார்.

குறித்த நபர் கண்டியைச் சேர்ந்த மணிமோகன் என வைத்தியசலையில் தகவல்களை வழங்கியுள்ளார். கார் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment