625.500.560.350.160.300.053.800.900.160.90இலங்கையில் மோசடி, ஊழல் மற்றும் முறைக்கேடுகளில் ஈடுபட்ட நிறுவனங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்க கணக்காய்வு குழுவினால் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் இலங்கை சுங்க திணைக்களம் என்பன இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன.

அரசாங்கத்துக்கு பெருந்தொகையான வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் நிறுவனங்களாக குறித்த இரண்டு நிறுவனங்கள் காணப்படுவதாக அரசாங்க கணக்காராய்வு குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் பல்வேறு ஊழல், மோசடி மற்றும் முறைக்கேடுகள் காரணமாக அதற்கு சமமான பணத்தை இழப்பதும் இந்த நிறுவனங்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு நிறுவனங்களின் ஊழல் மோசடி முறைக்கேடு தொடர்பிலான தகவல்கள் உள்ளடக்கப்பட்ட அறிக்கை தற்போது வரையில் நாடாளுமன்றத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே இது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment