625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் சம்பவம் அதிகரித்து செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட குறித்த மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் குடும்பங்களில் இருந்து நாளாந்தம் கூலிவேலைகள் செய்வதற்காக சிறுவர்கள் அனுப்பப்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆண் சிறுவர்கள் கட்டட நிர்மாண வேலைகள், பலசரக்கு வாணிபங்களில் மூட்டைகள் சுமத்தல், மீன்பிடித்தல் போன்றதொழில்களிலும் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு சிறுமிகள் வீட்டுவேலைகளிலும், தோட்ட வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலை மற்றும் போரின் காரணமாக தாய் தந்தையை இழந்த சிறுவர்கள் மற்றும் போரின் போது அங்கவீனமாக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளே அதிகம் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment