unnamed-22மக்களின் வீட்டித்திட்ட தேவைகளுக்காக கல்லு ஏற்றவரும் தமக்கு கல்லுத்தராது கம்பனிகளுக்கு கல்லுவழங்குவதாக தெரிவித்து வாகண சாரதிகள் கல்லு அகழ்வில் ஈடுபட்டுள்ள கம்பனிக்கு எதிராக இன்று(15) காலை நடாத்திய வீதிமறியல் போராட்டத்தால்ஒட்டுசுட்டான் பகுதியில்  பதற்றம் நிலவியது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது

இன்று காலையில்ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள கருஙகல் உடைக்கும் நிறுவனமாகிய WKK Lanka.co.(PVT) LTD நிறுவனமானது உள்ளுர் மக்களுக்கு குறிப்பாக முல்லைத்தீவு அடங்கலாக வடமாகாணத்தின் மக்களுக்கான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வேலைகளுக்காக கல்லு ஏற்றுவதற்காக வருகைதந்து காவல் நிற்கும் தமக்கு கல்லுவழங்காது கம்பனிகள் சிலவற்றிற்கு கல்லை வழங்குவதாக கூறி ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.

தாம் ஆறு ஏழு நாள் காவல் இருப்பதாகவும் வெளி கம்பனிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மேற்ப்படி நிறுவனம் கல்லினை வழங்குவதாகவும் நாட்கள் நிறைய செல்வதால் எமது உணவு  உள்ளிட்ட செலவுகள் அதிகரிப்பதால் மக்களுக்கு குறைந்த விலையில் கல்லினை விற்கமுடியாதுள்ளதாகவும் அவர்களிடம் முன்னுரிமை அடிப்படையில் கல்லை பெற்றுக்கொள்ளும் கம்பனிகள் சில தமது வாடிக்கையாளர்களுக்கே குறைந்தவிலையில் கல்லை வழங்குவதாகவும் இதனால் தாம் பாதிப்படைவதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.

கூலித் தொழிலாக சாரதியாக கடமையாற்றுபவர்கள் ஆறு நாளுக்கு ஒருதடவை ஒருலோட் கல்லை கொண்டுசெல்வதால் ஆறு நாளுக்கு ஒருதடவையே ஒரு நாள் சம்பளம் பெறுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் வாகணங்களை லீசிங்கில் பெற்றவர்கள் அதனை செலுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.

இதைனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் திரு து.ரவிகரன் அவர்கள் சாரதிகளுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டு உரிய நிறுவன அதிகாரிகளுடன் சென்று கலந்துரையாடினார். எனினும் சாரதிகள் கம்பனிகளுக்கு ஒரு டிப்பர் ஏற்றிவிட்டால் அடுத்தது தமது ஒருடிப்பர் என்ற அடிப்படையில் ஏற்றிவிடுமாறு கேட்ட கோரிக்கைக்கு குறித்த நிறுவனம் உடன்படாததால் பெரும் பதற்றம் நிலவியது.

குறித்த கம்பனி உடன்படாததால் சந்திப்பு தோல்வியடைய வீதிமறியல் போராட்டத்தில் தொடர்ந்து குதிக்க சாரதிகள் முற்ப்பட்டனர். இந்தவேளையில் சம்பவ இடத்திற்குவருகைதந்த ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மாகாணசபை உறுப்பினர் சாரதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மூன்று நாட்க்கள் அவகாசம் தருமாறும் அதற்குள் உரியவர்களுடன் கதைத்து நல்லதொரு தீர்மானம் வழங்குவதாகவும் அவர்கள் அவ்வாறு உடன்படாவிட்டால் உங்களது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து சாரதிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு சென்றதோடு திங்கட்கிழமை தீர்வு எட்டப்படாவிட்டால் செவ்வாய்க்கிழமை முதல் முற்றுமுழுதாக வீதியை மறித்து போராட்டத்திலீடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் திரு து.ரவிகரன் அவர்கள் முல்லைத்தீவு உள்ளிட்ட வடமாகாண மக்களின் வீட்டுத்திட்ட தேவைகள் உள்ளிட்ட தேவைகளுக்கு கல்லு வழங்காது மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை முற்றிலும் தவறானது. ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெறும் இந்த கருங்கல் அகழ்வு அனுமதிகளுக்கு அப்பால் பட்டு சட்டவிரோதமதாக இடம்பெற்றுவருகிறது. இதனை முதலமைச்சர் அவர்களும் வருகைதந்து பார்வையிட்டிருந்தார். இவ்வாறு இடம்பெறும் சட்ட விரோத செயற்ப்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். அதுவரையில் அகழ்வு இடம்பெறும் இந்தக்கற்கள் எமது மக்களின் அடிப்படைத்தேவைகளுக்கு முன்னுரிமையாக வழங்கவேண்டும். சாரதிகளின் கோரிக்கை நியாயமானது. இது நிறைவேற்றப்படாவிட்டால் சாரதிகளோடு இந்தபோராட்டத்திற்கு தானும் ஆதரவு வழங்குவேன் என தெரிவித்தார்.

எது எவ்வாறிருப்பினும் ஒட்டுசுட்டானில் ஏற்ப்பட்டுள்ள இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக கடந்த மாதம் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இறுதி தீர்மானம் எட்டப்பட்டது. அதாவது உள்ளுர் தேவைகளுக்காக கல்லு மணல் கிரவல் வழங்கப்பட வேண்டுமெனவும் வெளியிடங்களுக்கு இவற்றை எடுத்துசெல்ல தடைவிதிப்பதாகவும் ஆனால் அந்த தீர்மானம் என்னவாச்சு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.unnamed-2-7unnamed-3-6 unnamed-4-5 unnamed-5-5 unnamed-6-3 unnamed-22

Comments

comments, Login your facebook to comment