625.500.560.350.160.300.053.800.900.160.90மட்டக்களப்பில் கடந்த 4 மாதங்களாக இலக்க தகடின்றி வாகனம் உலாவுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

இந்த வாகனம் அதிகமாக இரவு நேரங்களில் அதிக வேகமாக செல்வதாகவும் இதில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் உள்ளது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகளவிலான போக்குவரத்து பொலிஸார் மட்டக்களப்பில் இருந்தும் இந்த வாகனம் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

அதே நேரம் பெண்களை துரத்தி துரத்தி எழுதும் பொலிஸாரின் கண்களில் இது தென்பட வில்லையா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு…

கடந்த காலங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பல்வேறுபட்ட குற்றச் செயல்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் இவ்வாறான இலக்கத்தகடு அற்ற வாகனங்களின் நடமாற்றத்தினால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இரவு பகலாக நடமாட வேண்டிய நிலையுள்ளதாக தெரியவருகின்றது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)

Comments

comments, Login your facebook to comment