625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலிம்நகர் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்தின் போது பஸ் சில்லுக்குள் சிக்குண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து 15.10.2016 மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்துவிலைச் சேர்ந்த எம்.ஜ.கால்டீன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை நிறுத்தி ஏற முயன்றபோதே தவறி வீழ்ந்து பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment